தளரத்தப்பட்டது ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை! எண்ணெய் வாங்க துடிக்கும் இந்தியா
அமெரிக்கா ஈரானுக்கு எதிரான எண்ணெய் தடைகளை தற்காலிகமாக தளர்த்தியதையடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஈரான் எண்ணெயை மீண்டும் வாங்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஈரான் எண்ணெயை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அரசின் வழிகாட்டுதலையும், கட்டணம் செலுத்தும் முறைகள் குறித்து அமெரிக்காவின் தெளிவான விளக்கத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன.
தற்காலிக அனுமதி
சமீபத்தில் அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் மீதான சில தடைகளை தளர்த்தியபோது, கையிருப்பு குறைவாக உள்ள இந்தியா போன்ற நாடுகள் விரைவாக ரஷ்ய எண்ணெயை வாங்க முனைந்தன.

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியதன்படி, மார்ச் 20க்குள் கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்கள் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்த எண்ணெய் ஏப்ரல் 19க்குள் இறக்கப்பட வேண்டும்.
கடலில் இருக்கும் எண்ணெய் பீப்பாய்கள்
தற்போது 130 முதல் 170 மில்லியன் பீப்பாய்கள் வரை ஈரான் கச்சா எண்ணெய் கடலில் கப்பல்களில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் பீப்பாய்களினால் மத்திய கிழக்கு உற்பத்தி குறைபாட்டை இரண்டு வாரங்களுக்கும் குறைவாக மட்டுமே ஈடு செய்ய முடியும் என தெரியவருகிறது.
இந்நிலையில், ஆசியா தனது மொத்த எண்ணெய் தேவையின் சுமார் 60 வீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெற்றுவருகிறது. ஹோர்மோஸ் நீரிணை பதற்ற நிலை காரணமாக எண்ணெய் வழங்கலில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆசியாவின் பல சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து, எரிபொருள் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |