கல்வி அமைச்சின் அறிவிப்பை மீறிய வடமாகாண கல்வித் திணைக்களம்
மத்திய கல்வி அமைச்சு முதலாம் தவணைக்கான பரீட்சைகளை இரத்துச்செய்துள்ள போதிலும் வடமாகாண கல்வி அமைச்சு இவ்வறிவுறுத்தலை பின்தள்ளி பரீட்சைகளை நடாத்த முனைப்புடன் செயற்படுவது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், பதிப்பகங்களில் பெறப்படும் சலுகை கொடுப்பனவுக்காகவா வடமாகாண கல்வி அமைச்சு இந்த பரீட்சைகளை நடத்தவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கல்வி அமைச்சின் சுற்று நிருபம் ED/17/03/01/01/01 திகதி 2026.01.02 இன் பந்தி 4.7 இல் குறிப்பிட்டதற்கு அமைவாக தரம் 7-11 வரையும் புதிய தரம் 6 இற்கும் பரீட்சைகள் நடாத்தப்பட கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகள்
எனினும் வடமாகாண கல்வி அமைச்சு முதலாம் தவணை விஞ்ஞான பாட செயன்முறைப் பரீட்சை (கடித இல. NP/20/ED/Sc/Gen திகதி 12.02.2026) ஊடாகவும் தவணை பரீட்சை தொடர்பாக வெறுமனே கையொப்பம் இடப்பட்ட நேரசூசி ஊடாகவும் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே முதலாம் தவணையில் விளையாட்டுப் போட்டிகள் காரணமாக பரீட்சைகள் இடைநிறுத்தப்படும் என்கின்ற சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டது.
அத்துடன் மேற்குறிப்பிட்ட இந்த வருடத்திற்கான புதிய சுற்று நிருபம் என அனைத்தையும் புறம்தள்ளி மத்திய அதிகாரத்தை புறம் தள்ளி வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் செயற்படுவது மாணவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் செயற்பாடாக அமையக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

