2025 ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இந்தியா : இலங்கைக்கு கிடைத்த இடம்
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக பிறப்புகள் இடம்பெற்றுள்ளதாக விஷுவல் கேபிடலிஸ்ட் வலைத்தளம்(Visual Capitalist website) கணித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் 23.1 மில்லியன் பிறப்புகள் பதிவாகியுள்ளதாக வலைத்தளம் தெரிவிக்கிறது.
சீனாவில் இரண்டாவது அதிகபட்ச பிறப்புகளும், பாகிஸ்தானில் மூன்றாவது அதிகபட்ச பிறப்புகளும் பதிவாகியுள்ளதாக வலைத்தளம் கூறுகிறது. சீனாவில் 8.7 மில்லியன் பிறப்புகள் பதிவாகியுள்ளதாக வலைத்தளம் கணித்துள்ளது.
70 ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் 6.9 மில்லியன் பிறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

விசுவல் கேபிடலிஸ்ட் வலைத்தளத்தின்படி, கடந்த ஆண்டு இலங்கையில் 318,489 குழந்தைகள் பிறந்தன.இதன்படி இலங்கை 70 ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.
விஷுவல் கேபிடலிஸ்ட் வலைத்தளத்தின்படி, கடந்த ஆண்டு ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்தன.இதன்படி ஆசியாவில் 65.1 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |