அனுராதபுரத்தில் இந்திய வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் கண்டுபிடிப்பு! அதிகரிக்கும் அபாயம்
அனுராதபுரத்தில் உள்ள ஒரு முன்னணி சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இந்திய நாட்டவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் சிகிச்சைக்காக கெபிடிகொல்லாவ ஆதார மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த 27 வயதான இந்திய நாட்டவர் எட்டு நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்ததாகவும், சுற்றுலா விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும் அனுராதபுர நகரசபையின் நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் ஜெயம்பத் பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, கெபிடிகொல்லாவ ஆதார மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்கனவே இந்திய வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனால் ஏனைய நோயாளிகள் இந்திய வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.