ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...!

Sri Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Aug 01, 2026 09:43 AM GMT
Report
Courtesy: Dharu

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரூபாய் 100 மில்லியன் நட்டஈடும் விதிக்கப்பட்டது ஆனால் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க மட்டும் குற்றவியல் நடவடிக்கையில் இருந்து தப்பியது எப்படி ?

268 அப்பாவி உயிர்களை பலிகொண்ட இந்த தேசிய சோகத்தில் நாட்டின் பிரதமராக இருந்தவர் எப்படி பொறுப்பாக முடியாது ? என்ற பொதுமக்களின் கேள்விக்கு, கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, CID விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியன வழங்கும் விடைகளை இங்கு விரிவாக பார்க்கலாம்.

அதிர்ச்சியில் ஐரோப்பா: கடலில் நீந்தி ஒரே நாளில் ஸ்பெயினுள் புகுந்த 60000 பேர் - பலர் பலி

அதிர்ச்சியில் ஐரோப்பா: கடலில் நீந்தி ஒரே நாளில் ஸ்பெயினுள் புகுந்த 60000 பேர் - பலர் பலி

1. 2018 அரசியலமைப்பு நெருக்கடி உருவாக்கிய அதிகார வெற்றிடம்

2018 ஒக்டோபர் 26 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். 52 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பத்தின் பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவால் டிசம்பர் 16 அன்று ரணில் மீண்டும் பிரதமரானார்.

அரசியலமைப்பு நெருக்கடிக்கு பின்னர் ஜனாதிபதி-பிரதமர் உறவு முற்றாக முறிந்தது.

ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...! | Why Ranil Exonerated In Easter Attack Case

இதன் நேரடி விளைவாக, 2018 ஒக்டோபர் 26 முதல் 2019 ஏப்ரல் 21 தாக்குதல் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய பாதுகாப்பு சபையின் ஒரு கூட்டத்திற்கும் அழைக்கப்படவில்லை.

தேசிய பாதுகாப்பு சபைதான் புலனாய்வுத் தகவல்களை ஆராய்ந்து தேசிய பாதுகாப்பு முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பு. அதில் இருந்து பிரதமர் முற்றாக விலக்கப்பட்டதால் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய 3 எச்சரிக்கைகளும் அவருக்கு சென்றடையவில்லை.

இதில் தான் தகவல் வழங்கப்படாத ஒருவர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ? என்ற சட்ட வாதம் ரணில் தரப்புக்கு பலமாக அமைந்தது. 

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தமை

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறைமைப்படி, பாதுகாப்பு அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஆகியன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழேயே இயங்கின.

2015-2019 காலகட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.

ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...! | Why Ranil Exonerated In Easter Attack Case

காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வு சேவைகள் அனைத்தும் இவரின் கீழும் அவசரகால உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவரின் கீழே இருந்தது இதில் பிரதமராக இருந்த ரணிலிடம் பொருளாதாரம், கொள்கை வகுப்பு மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் வழங்கப்பட்டன.

ஒருபோதும் பாதுகாப்பு விவகாரங்களில் நேரடி நிர்வாக அதிகாரம் வழங்கப்படவில்லை.

இது குறித்த விசாரணையில் உயர் நீதிமன்ற தீர்ப்பில் ( SC FR 163/2019) 7 நீதிபதிகள் கொண்ட ஆயம், பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிக்கே புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் இறுதி பொறுப்பு உள்ளது என தெளிவாக குறிப்பிட்டது.

இதனால் கடமை தவறுதல் என்ற குற்றவியல் பிரிவு ரணில் மீது பாயவில்லை. 

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை

3. CID அறிக்கையும் தகவல் பரிமாற்ற துண்டிப்பும்

அப்போதைய அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன CID இடம் வழங்கிய வாக்குமூலத்தில், “(2020 ஜூன்), ஏப்ரல் 9, 11 மற்றும் 20 ஆகிய தினங்களில் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய எச்சரிக்கைகளை ஜனாதிபதிக்கான தினசரி புலனாய்வு அறிக்கையில் சேர்த்தேன்.

அது ஜனாதிபதி செயலகத்துக்கு மட்டுமே அனுப்பப்படும். பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பும் நடைமுறை அப்போது இருக்கவில்லை” என தெரிவித்தார்.

ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...! | Why Ranil Exonerated In Easter Attack Case

அத்தோடு "ஏப்ரல் 20 அன்று தகவல் கிடைத்ததும் நான் ஜனாதிபதி மைத்திரிக்கு மட்டுமே வட்ஸ்அப் அனுப்பினேன்.

பிரதமருக்கு அனுப்பவில்லை. காரணம் பாதுகாப்பு விவகாரங்கள் ஜனாதிபதியின் நேரடி பொறுப்பு. தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு பிரதமர் அழைக்கப்படாததால் அவருக்கு தகவல் தெரிவிக்கும் வழமை இருக்கவில்லை” என ஹேமசிறியும் அப்போது உயர் நீதிமன்றில் வாக்குமூலம் அளித்தார்.

இதன்படி தகவல் பரிமாற்ற சங்கிலியில் பிரதமர் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால் குற்றவியல் பொறுப்பில் இருந்து ரணில் மீண்டும் தப்பினார்.

கலிபோர்னியாவில் F-35B போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி

கலிபோர்னியாவில் F-35B போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி

4. உயர் நீதிமன்றத்தின் தெளிவான பிரித்தாளும் தீர்ப்பு (2023 ஜனவரி 12 - SC FR 163/2019)

இந்த வரலாற்று தீர்ப்பில்தான் உயர் நீதிமன்றம் யார் யார் பொறுப்பு என்பதை தெளிவாக பிரித்தது.

1. மைத்திரிபால சிறிசேன: ரூ.100 மில்லியன் நட்டஈடு.

  • காரணம் - பாதுகாப்பு அமைச்சர், தகவல் கிடைத்தும் நடவடிக்கை இல்லை.

2. பூஜித் ஜயசுந்தர: ரூ.75 மில்லியன் நட்டஈடு.

  • காரணம் - காவல்துறைமா அதிபராக எச்சரிக்கையை செயல்படுத்தவில்லை.

 3. ஹேமசிறி பெர்னாண்டோ: ரூ.50 மில்லியன்.

  • காரணம் - பாதுகாப்பு செயலாளராக தடுப்பு நடவடிக்கை தவறியமை.

 4. நிலந்த ஜயவர்தன: ரூ.75 மில்லியன்.

  • காரணம் - புலனாய்வு பணிப்பாளராக தகவலை முறையாக கையாளவில்லை.

இந்த தீர்ப்பின் முடிவில்தான் ரணில் விடுவிக்கப்பட்டவர்.

பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு

புலனாய்வுத் தகவல்கள்

ரணில் விக்ரமசிங்க, "பிரதமருக்கு புலனாய்வுத் தகவல்கள் முறையாக வழங்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு சபையில் இருந்து விலக்கப்பட்டிருந்தார். எனவே அவரால் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் நிலையில் இருக்கவில்லை" என நீதிமன்றம் குறிப்பிட்டு வழக்கில் இருந்து விடுவித்தது.

எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க குற்றவியல் பொறுப்பில் இருந்து தப்பியதற்கு சட்ட ரீதியான 4 காரணங்கள் இருந்தாலும் அரசியல் ரீதியான கேள்விகள் இன்னும் எழுப்பப்படுகின்றன.

ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...! | Why Ranil Exonerated In Easter Attack Case

நாட்டின் பிரதமராக இருந்தும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டறியவில்லை.தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்படாவிட்டாலும் நாடாளுமன்றல் அல்லது அமைச்சரவையில் இதை பிரச்சினையாக எழுப்பியிருக்கவில்லை. ஜனாதிபதியுடன் முரண்பாடு இருந்தாலும் 268 உயிர்கள் தொடர்பான விவகாரத்தில் அரசியல் பாராமல் செயல்பட்டிருக்கவில்லை.

இவற்றையே அப்போதைய எதிர்க்கட்சிகள் கேள்விகளாக எழுப்பின.

சட்டப்படி குற்றமில்லை என்பதற்கும், அரசியல் ரீதியாக பொறுப்பு இல்லை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது அவர்களின் வாதம். 

2019 உயிர்த்த தாக்குதல் வழக்கில், அதிகாரம் இருந்தவர்களுக்கு தகவல் இருந்தது, தகவல் தேவைப்பட்டவருக்கு அதிகாரம் இருக்கவில்லை என்ற அவல நிலையே 268 உயிர்களை காவு கொண்டது என்பதை இந்த விசாரணை ஆவணங்கள் தெளிவாக காட்டுகின்றன.  

இதில் ரணில் விக்ரமசிங்க சட்டத்தின் முன் தப்பியிருந்தாலும் வரலாற்றின் கேள்விகளுக்கு இன்னும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. 

இலங்கைக்கு கடத்தவிருந்த பாரியளவான போதைப்பொருளுடன் இந்தியாவில் வசமாக சிக்கிய மூவர்!

இலங்கைக்கு கடத்தவிருந்த பாரியளவான போதைப்பொருளுடன் இந்தியாவில் வசமாக சிக்கிய மூவர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025