இந்தியா -இலங்கை அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி
இந்தியா(India))-இலங்கை( Sri lanka) அணிகள் இடையிலான முதல் ரி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் ரி20 கிரிக்கெட் போட்டி பல்லகலவில் இன்று(27) நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இந்திய அணி
இதற்கமைய முதலில் களமிறங்கிய இந்திய அணிதொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாட 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 74 ஓட்டங்களை குவித்தது.
அதனைதொடர்ந்து சுப்மன் கில் 34 ஓட்டங்களில் வெளியேற ஜெய்ஸ்வால் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாடினர்.
சூர்யகுமார் 26 பந்தில் அரை சதம் அடித்து 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.ரிஷப் பண்ட் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பாண்ட்யா 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை அணி சார்பில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கை அணி
இதையடுத்து, 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
முதலில் களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடினர்.
பெதும் நிஸ்ஸங்க 79 ஓட்டங்களிலும், குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து வந்த குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸும் ஆட்டமிழக்க அடுத்து வந்த அனைவருமே சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதற்கமைய, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இதனால் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றிப்பெற்றது.
A 43-run victory in the first T20I! ?#TeamIndia take a 1-0 lead in the series ??
— BCCI (@BCCI) July 27, 2024
Scorecard ▶️ https://t.co/Ccm4ubmWnj #SLvIND pic.twitter.com/zZ9b1TocAf
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |