இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை அணியின் மற்றுமொரு வீரர்
இலங்கை(Sri lanka) கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ(Binura Fernando), சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணிக்கு எதிரான தொடரில் பினுர பெர்னாண்டோவிற்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ்(Ramesh Mendis) இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதன்படி இரு அணிகளும் மோதும் முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று(27) இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இந்தியாவுக்கு (india) எதிரான தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா (Dushmantha Chameera )மற்றும் நுவான் துஷார (Nuwan Thushara) ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |