இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது இந்திய மகளிர் அணி
இலங்கை (Sri Lanka) , இந்தியா (India) மற்றும் தென்னாபிரிக்கா (South Africa) ஆகிய மகளிர் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்திய மகளிர் அணி
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் சார்பில் ஸ்மிருதி மந்தனா 116 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 343 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இதன்படி குறித்த முத்தரப்பு தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 23 மணி நேரம் முன்
