இந்தியத் தூதுவர் மற்றும் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் (santosh-jha) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் (S. Shritharan) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, இன்று (10) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது எக்ஸ் (x) பக்கத்தில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அர்ப்பணிப்பு
இலங்கையின் தற்கால அரசியல் நிலவரம், வடக்கு, கிழக்கு அடங்கலாக இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களை மையப்படுத்திய விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிராந்திய மக்களுக்காக இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா இதன்போது வலியுறுத்தியுள்ளார் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
HC @santjha met Hon. MP @ImShritharan. The discussions centred on the political developments in ?? as well as ??’s development and economic cooperation in Sri Lanka including in the North and the East. HC also reiterated India's continued commitment to the people of the region. pic.twitter.com/ZA08a5ZhYr
— India in Sri Lanka (@IndiainSL) May 9, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |