38 வயதுப் பெண்மணியின் வாக்குமூலம்
அம்மாவின் அச்சம்
இந்தியப் படைகள் ஈழத்தை ஆக்கிரமித்த காலப்பகுதியில் நான் இந்தியாவில் தங்கியிருந்து கல்வி கற்றுக்கொண்டிருந்தேன்.
அப்பொழுது இலங்கையில் இருந்து எனது அம்மா கடிதம் எழுதும் போது, இந்தியப் படைகள் பற்றி மக்கள் மத்தியில் பரவியிருந்த அச்சம் கலந்த வதந்திகள் பற்றியும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
இந்தியப் படைகள் வீட்டுச் சோதனை என்று வீடுகளுக்குள் நுழைந்தால், அம்மா எனது சகோதரனை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியில் முற்றத்திற்கு வந்து நின்றுவிடுவதாக அந்தக் கடிதத்தில் எமுதியிருந்தார்.
இதேபோன்றுதான் அங்கு வீடுகளில் உள்ள அனைவருமே நடந்துகொள்வதாக அவர் எழுதியிருந்தார். அப்பொழுது எனது தம்பிக்கு மிகவும் குறைந்த வயது. அதேவேனை எனது அம்மாவிற்கோ 54 வயது. இவர்கள் வீட்டிற்குள் இருப்பதற்கு எதற்காகப் பயப்படவேண்டும் என்று எனது மனதினுள் கேள்வி எழுந்தது.
அக்காலகட்டத்தில் இந்தியப் படையினர் வயது முதிர்ந்த பெண்களைக்கூட விட்டுவைப்பதில்லை என்பது எனக்குப் பின்னரே தெரியவந்தது.
எமது பிரதேசத்தில் வயது வந்த பெண்கள் மீது இந்தியப் படையினர் புரிந்திருந்த பாலியல் கொடூரங்கள் பற்றி மக்கள் மத்தியில் உலாவியிருந்த செய்திகளே இதுபோன்ற அச்சத்தை எனது தாய் உட்பட பல மூதாட்டிகளுக்கும் ஏற்படுத்தியிருந்தது.
வீடுகளைச் சோதனையிட வரும் இந்தியப் படையினர் உள்ளே அழைத்தால்கூட எவருமே உள்ளே போவது கிடையாது. வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை அவர்கள் களவாடிச் சென்றாலும் பறவாயில்லை என்று தங்கள் மானத்தைக் காப்பதிலேயே அவர்கள் கரிசனை செலுத்துவது வழக்கம்.
வித்தியாசமான இரசனைகள்
இந்தியப் படையினரில் சிலருக்கு வித்தியாசமான ரசனைகள் இருந்தன. குறிப்பாக வயது முதிர்ந்த சிலஅதிகாரிகளுக்கு இளம் பெண்களில் நட்டம் இல்லை. அவர்கள் முதிய பெண்களைக் குறிவைத்துத்தான் சேஷ்டைகளை விடுவது வளக்கம். அதேபோன்று வேறு சில இந்தியப் படையினருக்கு பராயமடையாத சிறுமிகளை குதறுவதில் அலாதி பிரியம்.
எனவே அக்காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் இந்தியப் படையினர் என்றால் பராயமடையாத சிறுமிகள் முதல் 50 வயதைக் கடந்த முதிய பெண்கள்வரை அச்சத்துடன் நடுங்கினார்கள். இந்தியப் படைகளை மிகவும் வெறுத்தார்கள். இன்றுவரை இந்தியர்களையும், இந்தியாவையும் அவர்கள் வெறுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஏனெனில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள், கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
38 வயதுப் பெண்மணியின் வாக்குமூலம்
இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் கொடுமைகள் பற்றி 38 வயதுப் பெண்மணி ஒருவர் முறிந்த பனை ஆராய்ச்சியாளர்களுக்கு இவ்வாறு விபரித்திருந்தார்:
“1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி காலை 8 மணியளவில் மூன்று இந்திய இராணுவத்தினர் எங்களுடைய வீட்டிற்குள் வந்தார்கள். அப்பொழுது எனது அம்மா சமையல் அறையில் இருந்தார்.
நானும் எனது மகளுமே அவர்களைப் பார்த்தோம். “செக்கிங் என்று மட்டுமே சொல்லிவிட்டு எனது மகளை ஒரு அறைக்குள் தள்ளினார்கள்.
நான் அவளைப் பற்றி இழுத்துக்கொண்டு கத்தினேன். அம்மா..அம்மா.. தேடுகிறார்கள். என்று உரக்கக் கத்தினேன். உடனே அருகில் இருந்த இந்திய இராணுவத்தின் காவல் அரனில் இருந்து வேறு சில படையினர் எமது வீட்டுக்குள் ஓடி வர ஆரம்பித்தார்கள்.
எனது வீட்டிற்குள் இருந்த மூன்று படையினரும், ‘தாங்கள் சோதனையிட மட்டுமே வந்திருந்ததாகவும், உடனடியாகப் போய்விடுவதாகவும் கூறினார்கள்.
அவர்கள் கூறியபடியே ‘சோதனையை முடித்துக் கொண்டு அவர்கள் சென்றும் விட்டார்கள். ஆனால் அவர்கள் ‘சோதனை முடித்துக் கொண்டு செல்லும் போது எனது தங்கச் சங்கிலியைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள். நாங்கள் நன்றாகப் பயந்து போயிருந்தோம்.
பின்னர் எனது மகளை பெட்டி போன்றிருந்த பின்பக்க சிறிய அறை ஒன்றினுள் ஒழித்து வைத்துக்கொண்டேன். அன்று இரவு 9.30 மணியளவில் அதே மூன்று இராணுவத்தினரும் மீண்டும் எனது வீட்டை நோக்கி வருவதைக் கண்டேன். ஆனால் அவர்கள் இம்முறை இராணுவக் காவல் அரண் இருந்த பகுதி வழியாக வராமல், மற்றொரு பக்கத்தில் காலியாக இருந்த வீட்டின் வழியாக, சுவரைத் தாண்டிக் குதித்து வந்தார்கள்.
ஆயுதங்களுடன் வந்த அவர்கள் எனது பெற்றோரை ஒரு அறையிலுள் தள்ளிப் பூட்டினார்கள். என்னை ஒரு அறைக்குள் இழுத்துக்கொண்டு போய், என்மீது வன்புணர்வு புரிந்தார்கள். துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த என்னை ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் வார்த்தையால் விபரிக்க முடியாத அளவிற்குத் துன்புறுத்தினார்கள்.
நான் கூச்சல் போடவில்லை. நான் கூச்சல் போட்டு அதனால் அவர்கள் எனது பெற்றோரைச் சுட்டுவிட்டால் என்ன செய்வது? யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பேருந்து ஓட ஆரம்பித்த முதல் நாளே நான் எனது கிரமத்தை விட்டுப் போய்விட்டேன்.
பயங்கரக் கனவுகள் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தன. அந்த இந்தியப் பாதகர்களின் முகங்கள் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தன. அவர்களுடைய குரல்கள் அடிக்கடி கேட்பது போல் தோன்றின.
எங்கள் ஆண்களைப் பற்றி..
பின்னர் எனது மகளைக் கூட்டிக்கொண்டு வெளிநாடு போனேன். ஒரு மனநிலை வைத்திய நிபுணரைச் சந்தித்தேன்.
அவர் ஒரு அந்நியராக இருந்ததால் அவரிடம் என்னால் அனைத்தையும் கூற முடிந்தது. அவர் எனக்கு மருந்துகளைத் தந்தார். அவை ஓரளவு என்னைச் சாந்தப்படுத்தினாலும், என்னுடைய மனநிலைப் பாதிப்பை முற்றாக நீக்கிவிடவில்லை. என் நிலமையோ இன்னும் மோசமாகிக்கொண்டே போகின்றது.
எனது மகளையாவது காப்பாற்றமுடிந்ததே புண்ணியம்.
என்னுடைய கணவருக்கு இதுபற்றி எழுதியபோது, ஷஒன்றுக்கும் கவலைப்படாதே| என்று எழுதியிருந்தார்.
உங்களுக்குத் தெரியுத்தானே எங்களுடைய ஆண்களைப் பற்றி? அவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இந்த உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவள் மாதிரி உணர்கின்றேன்.
எனக்கு என்னவோ மாதிரி இருக்கின்றது என்று அந்தப் பெண்மணி தெரிவித்திருந்தார்.
அவலங்கள் இன்னும் தொடரும்…
[CGZFGZK ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |