அடுத்தகட்ட நகர்வு - சிறிலங்கா வரும் இந்திய இராணுவத் தளபதி
India
Shavendra Silva
Gotabaya Rajapaksa
SriLanka
General Manoj Mukund Naravana
By Chanakyan
இந்திய இராணுவத் தளபதியும் படைப்பிரதானியுமான ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவன (General Manoj Mukund Naravana) சிறிலங்காவுக்கு வருகைதரவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) மற்றும் படைப்பிரதானி ஆகியோரது அழைப்பிலேயே அவர் எதிர்வரும் 12ஆம் திகதி சிறிலங்காவுக்கு வருகைதரவுள்ளார்.
குறித்த பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உட்பட இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
அதேபோல அவர் சிறிலங்காவில் தங்கியுள்ள 5 நாட்களில் சிறிலங்கா - இந்திய இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற “மித்ரா சக்தி” போர்ப் பயிற்சிகளையும் பார்வையிடவுள்ளதாக இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.