அரசதலைவர் கோட்டாபயவுடன் இந்திய இராணுவத் தளபதி முக்கிய பேச்சு
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே (General Manoj Mukund Naravane)இன்று (13) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை(gotapaya Rajapaksa) சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பெறும் நோக்கில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை இந்திய இராணுவத் தளபதி நாரவனே சந்தித்ததாக இந்திய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியாவின் பங்காளியான இலங்கையின் முன்னோடியான செயற்பாட்டை பாராட்டுவதாகக் ஜெனரல் நாரவனே,இதன்போது தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜயசுந்தர(BP Jayasundera), சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க(Lalith Weeratunga), இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா,(General Shavendra Silva) மற்றும் இந்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

