புத்தளத்திலும் இந்திய படகுகள் ஏல விற்பனை
puttalam
auction
indian boat
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் ஏல விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது புத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகளும் ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்டு கற்பிட்டி ஆணவாசல் கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 இந்திய மீனவப்படகுகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் படகு ஒன்று தலா 51000 ஆயிரம் ரூபா வீதம் நான்கு படகுகளும் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.
இதேவேளை மன்னாரில் தடுத்து வைக்கபட்டுள்ள இந்திய மீனவர்களின் படகு ஏல விற்பனை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
