யாழ். பலாலி விமான நிலையத்துக்குள் நுழைய திட்டமிடும் மற்றுமொரு இந்திய நிறுவனம்!
Jaffna
Chennai
India
Jaffna International Airport
By pavan
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில் புதிய விமான சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்திடம் இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) எனும் இந்திய விமான நிறுவனம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கி வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ், இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்தவுடன் சென்னைக்கும் யாழ்ப்பாணத்தின் பலாலிக்கும் இடையே சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் அதிகாரிகள் குழு
இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர், இலங்கை வந்து அதற்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, தற்போது யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையேயான விமான சேவைகளை Alliance Air நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி