கனடாவில் மற்றுமொரு துயரம் : தீ விபத்தில் கருகி இந்திய குடும்பம் பலி
கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர் வெளியிட்ட தகவல்
இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் திகதி நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாளம் காணப்பட்டன
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், ராஜீவ் வாரிகோ(51), அவரது மனைவி ஷில்பா கோத்தா(47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் ராஜீவ் ஒன்டோரியோ அரசாங்கத்தின் சுகாதார துறையில் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
   
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        