கோவிலுக்கு நன்கொடையாக 20 பவுண் தங்க கிரீடத்தை அள்ளிக்கொடுத்த தம்பதி...எந்த கோவில் தெரியுமா!
இந்தியாவிலுள்ள, கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் 20 பவுண் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்திரை 1 நாளான நேற்று (14) தமிழ்ப் புத்தாண்டு உலகம் முழுவதும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, அதேபோல கேரளாவில் உள்ள மலையாள மக்களும் புத்தாண்டு தினமான விஷூ தினத்தை கோலாகலமாக கொண்டாடினர்.
விஷூ தினமான நேற்று கேரளாவில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலவிதமான காணிக்கைகளையும் கொடுத்து வழிபாடுகளை நிகழ்த்தி அகமகிழ்ந்தனர்.
தங்க கிரீடம்
அந்தவகையில் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய குருவாயூர் கோவில் மூலஸ்தான அதிபதியான குருவாயூரப்பனுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் காணிக்கை வழங்கியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் கிரிஜா என்ற இந்த தம்பதியினர் சுமார் 20 பவுண் தங்க கிரீடத்தை குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர்
சுமார் 160.350 கிராம் எடையிருக்கும் இந்த தங்க கிரீடமானது நேற்று தீபாராதனைக்கு பிறகு குருவாயூரப்பனுக்கு அணிவிக்கப்பட்டது, சுமார் 13 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பு மிக்கதாக இந்த கிரீடம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு (2023) குருவாயூர் கோவிலுக்கு சுமார் 14 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |