இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய முன்னாள் தவெக நிர்வாகி - வெளியான அதிர்ச்சித் தகவல்

Vijay Sri Lanka Police India Crime
By Thulsi Oct 19, 2026 05:11 AM GMT
Report

நாகையில் சிக்கிய மெத்தம் பெட்டமைன் போதை பொருளின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 300 கோடிக்கும் அதிகமானது என்று இந்திய மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாகையில், அண்மையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருளை வருவாய் புலனாய்வு இயக்குரக அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த வழக்கில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், வக்கீலுமான பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு

சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு

இரகசிய சோதனை நடவடிக்கை

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை; நாகையில் கடலோர கிராமம் ஒன்றில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய முன்னாள் தவெக நிர்வாகி - வெளியான அதிர்ச்சித் தகவல் | Indian Dri Seizes Sl Bound Drugs Worth 300 Crore

ரகசிய தகவலையடுத்து, அக்டோபர் 16 மற்றும் 17 திகதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், இரகசிய சோதனை நடவடிக்கைகளிலும் இறங்கினர். சோதனையில் 6 பெரிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 27 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வெள்ளித்தகடுகளால் ஒவ்வொரு பொட்டலமும் சுற்றப்பட்டு இருந்தது. அதன் எடை 5 கிலோ. பொட்டலத்தில் அதிக வீரியம் கொண்ட மெத்தம்பெட்டமைன் என்று சந்தேகிக்கப்படும் வெள்ளை நிற பொருள் இருந்தது.

மொத்தம் 137 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.300 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதை பொருளை நாகை கடலோர கிராம பகுதியில் இருந்து படகுகள் மூலம் கொண்டு சென்று நடுக்கடலில் வேறு ஒரு படகுக்கு மாற்றி இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை

வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை

சட்டவிரோத கடத்தல்

இதில் சந்தேகிக்கப்படும் நபருக்குச் சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில் ரூ.30 லட்சம் ரொக்கம் சிக்கியது. போதை பொருள் விற்பனையில் கிடைத்த பணம் என சந்தேகிக்கப்படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய முன்னாள் தவெக நிர்வாகி - வெளியான அதிர்ச்சித் தகவல் | Indian Dri Seizes Sl Bound Drugs Worth 300 Crore

கடத்தலில் தொடர்புடையதாக 4 பேர் போதைபொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றக் காவலில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் வழியாக, இலங்கைக்கு போதை பொருட்களை கடத்துவதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து, பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சட்டவிரோத கடத்தல் வலையமைப்பை கண்டுபிடித்து, வெற்றிக்கரமாக முறியடித்துள்ளோம்.

சட்டவிரோத கடத்தலுக்கான வழித்தடமாக இந்தியாவின் கடற்கரையை பயன்படுத்துவதை தடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளே இது. இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.

சிறிங்கன் ஏர்லைன்ஸ் வழங்கும் அவசர எச்சரிக்கை

சிறிங்கன் ஏர்லைன்ஸ் வழங்கும் அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026