இந்திய வெளியுறவு அமைச்சரிடமிருந்து இலங்கைக்கு வந்த கடிதம்
letter
g.l.peiris
jaishanker
By Sumithiran
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்வீட் செய்துள்ளது.
அந்த ட்வீட்டின் படி, கலாநிதி ஜெய்சங்கர், இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சருடன் நெருங்கி செயற்பட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையிலேயே இந்தியாவிலிருந்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கை வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்தன செயல்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி