திருக்கோணஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமன் (படங்கள்)
மலையக மக்களுக்கான “நாம்200“ நிகழ்வில் கலந்துகொள்வதற்தாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(1) இலங்கையை வந்தடைந்தார்.
மேலும், இவர் தங்கியிருக்கும் நாட்களில் இலங்கையின் உயர்மட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில்
இந்நிலையில்,இன்று(2) கொழும்பில், நடைபெறவுள்ள “நாம்200“ நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள நிலையில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலையிலுள்ள திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்து, முஸ்லிம் வணக்கஸ்த்தலங்களை அபகரிப்பதற்கு உதவும் தொல்பொருள் திணைக்களம்: சுட்டிக்காட்டும் அமெரிக்க ஆணைக்குழு
அதேவேளை,திருகோணமலை மாவட்டத்திற்கு வருகைதந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின் திருகோணமலைக் கிளை இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றம் பல அதிதிகள் பங்கேற்றிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்திய நிதி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







