தமிழர் தலைநகருக்கு சென்ற இந்திய நிதியமைச்சர்
Trincomalee
Smt Nirmala Sitharaman
Senthil Thondaman
By Jaso
கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று (01)இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தந்துள்ளார்.
திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதா ராமன் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க,ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் எல்.எல்.அணில் விஜயஶ்ரீ, மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் ஏ.பி.மதனவாசன் ஆகியோர் வரவேற்றனர்.
பல முக்கிய நிகழ்வுகளிலும்
மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதா ராமன் நாளை (02) திருக்கோணேச்சரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்