யாழில் உயிரிழந்த கடற்படை அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடற்படை அதிகாரி உயிரிழக்கவில்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீன்பிடி படகுக்குள் ஏற முயன்ற போது சீரற்ற வானிலை காரணமாக அவர் தவறி வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் இதையடுத்து, அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறிலங்கா கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
அத்துடன், இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது சிறிலங்கா கடற்படையின் கப்பல் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களும் கைப்பற்றப்பட்ட படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை சுமார் 214 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 28 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |