நேற்றும் 14 இந்திய மீனவர்கள் படகுடன் கைது
arrested
fishermen
Indian
By Vanan
யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை நேற்றுமுன்தினம் 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி