இலங்கைச் சிறையில் தமிழக கடற்றொழிலாளர்கள்! தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய உறவுகள்

Indian fishermen Tamil nadu Sri Lankan Peoples Tamil Nadu Police Chief Minister of Tamil Nadu
By Dhilak May 22, 2026 12:07 PM GMT
Report
Courtesy: நயன்

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடற்றொழிளார்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்த கபில் ரோச்சர், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ், பெரிய கருப்பன், அகர்சன் உள்ளிட்ட 12 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீர்கொழும்பு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் கடற்றொழிலாளர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் நீடிக்கப்டடு 90 நாட்களுக்கு மேலாக விசாரணை கைதிகளாக இருக்கின்றனர்.

கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

காவல்துறையினர் பேச்சுவார்த்தை

இந்த நிலையில், கடற்றொழிலாளர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து அவர்களையும் படகையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைச் சிறையில் தமிழக கடற்றொழிலாளர்கள்! தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய உறவுகள் | Indian Fishermen Arrested In Sri Lanka Protest

ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் மீனவ குடும்பத்தினர், மீனவ பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாம்பன் சாலை பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை 

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள், “தமிழக அமைச்சரவையில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தூத்துக்குடி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு மீனவர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

இலங்கைச் சிறையில் தமிழக கடற்றொழிலாளர்கள்! தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய உறவுகள் | Indian Fishermen Arrested In Sri Lanka Protest

அதேவேளை பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய் கடற்றொழிலாளர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் பேசி நல்ல முடிவை பெற்று தர வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் கடற்றொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக மீளப் பெறுவதாகவும், 27ஆம் திகதி கடற்றொழிலாளர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளளோம்.” என்றனர்.

ஆசிரியர் இடமாற்றத்தினால் அழிக்கப்படும் வடமாகாணக் கல்வி : கஜேந்திரகுமார் எம்.பி குற்றச்சாட்டு!

ஆசிரியர் இடமாற்றத்தினால் அழிக்கப்படும் வடமாகாணக் கல்வி : கஜேந்திரகுமார் எம்.பி குற்றச்சாட்டு!

சிறுமி பாலியல் பலாத்காரம்! ஹேமரதன தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

சிறுமி பாலியல் பலாத்காரம்! ஹேமரதன தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026