தலைமன்னார் கடலில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை(sri lanka) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்களையும் (india fishermen)எதிர்வரும் 1 ஆம் திகதி (01-08-2025)வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் இன்று (22) செவ்வாய்க்கிழமை கிழமை உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (21) இரவு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகு ஒன்றையும் அதிலிருந்து 4 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களையும்,இழுவைப் படகையும் கடற்படையினர் தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


