இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை
இலங்கை கடற்பரப்பிற்கும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதானவர்கள்
சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான கடற்றொழிலாளர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கான தீர்ப்பு
அதேநேரம் டிசம்பர் 28 ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 3 மணி நேரம் முன்