திருகோணமலைக்கு சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஹெலியில் திடீர் கோளாறு
helicopter
indinan foreign secretary
technical issue
By Jaso
திருகோணமலைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா பயணித்த ஹெலிகொப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை விமானப்படை ஊடகப் பேச்சாளர், குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பயணித்த MI-17 ரக ஹெலிகொப்டரிலேயே இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஹெலிகொப்டர் திருகோணமலையிலேயே தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானதாகவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, பிரமுகர்களின் பயன்பாட்டிற்கான Y-12 ரக விமானம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விமானத்திலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.