இந்திய வெளிவிவகார செயலரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன? வெளியானது தகவல்
இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன என்பதை த ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு உடனடியாக விநியோகித்தல், கொவிட் வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்கள் மற்றும் இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு மத்தியில், பொருளாதார ரீதியில் தம்மால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இலங்கைக்கான விஜயத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பித்திருந்ததுடன், இன்றைய தினம் கண்டி , திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.