சிறிலங்கா பிரதமரை சந்தித்து பிரியாவிடை பெற்ற இந்திய உயர்ஸ்தானிகர்
சிறிலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பிரியாவிடை பெற்றதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் வலுவான உறவுக்கு அவர் அளித்த தொடர்ச்சியான ஆதரவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நன்றி தெரிவித்தார்
இதுவரை நாளும் கிடைத்த ஆதரவு இதே ஆதரவு தமக்கு பின்னர் பதவியேற்கும் புதிய உயர்ஸ்தானிகருக்கும் கிடைக்கும் என கோபால் பாக்லே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், மிகவும் கடினமான காலங்களில் சிறிலங்காவிற்கு வழங்கிய ஆதரவுக்காக இந்திய உயர்ஸ்தானிகருக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து, இந்திய - இலங்கை உறவுகளின் நாகரிக தொடர்புகள் குறித்து ஆராய்ந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு அரசுடன் கலந்துரையாடுவதே இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |