கட்டுநாயக்காவில் கைதான இந்திய ஆணும் இலங்கை பெண்ணும்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (23)செவ்வாய்க்கிழமை இந்தியா சென்னையைச் சேர்ந்த ஆணும் கொழும்பைச் சேர்ந்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பில் வசிக்கும் 29 வயதுடைய பெண். இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய ஆண் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
சுங்க அதிகாரிகள் குழுவால் கைது
இன்று காலை கட்டுநாயக்க வருகை முனையத்திலிருந்து ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ''குஷ்'' போதைப்பொருளுடன் ''கிரீன் சனல்'' வழியாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் எடுத்துச் சென்ற இரண்டு பொதிகளில், 05 கிலோகிராம் 092 கிராம் ''குஷ்'' அடங்கிய ஒரு பையுடனும், 05 பொதிகள் இருந்தன.
''குஷ்'' , அவற்றைக் கொண்டு வந்த மேற்படி இருவரும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
