கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளைஞர் : சிக்கினார் சூத்திரதாரி
கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவரை சுட்டு கொன்ற சம்பவத்தில் இந்திய இளைஞர்ஒருவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிராம்ப்டன் நகரை சேர்ந்த நிஷான் திந்த் (வயது 18) என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் திகதி உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணையில் வெளியான தகவல்
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரை மற்றொரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது.
இதுபற்றிய தகவல் அல்லது காணொளி காட்சிகள் எதுவும் உள்ளனவா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லப்பட்ட இளைஞர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரை சுட்டு கொன்றவரும் இந்தியா வம்சாவளி இளைஞர் என தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து நிஷானை சுட்டு விட்டு, பின்னர் மருத்துவமனை அருகே விட்டு விட்டு சென்றது தெரிய வந்துள்ளது.
சிக்கிய சூத்திரதாரி
இதுபற்றி கனடா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, பிராம்ப்டன் நகரை சேர்ந்த பிரீத்பால் சிங் (வயது 18) என்பவரை கைது செய்தனர்.
இதன்பின் அவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், ஒன்டாரியோ நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். தொடர்ந்து விசாரணைக்கு வலு சேர்க்கும் வகையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |