பிலிப்பைன்சில் விமான விபத்து - இந்திய மாணவர் உட்பட 2 பேர் பலி
By pavan
பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் நகரில் ஏற்பட்ட விமான விபத்தில் இந்திய மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
லாவோக் நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.
அவருடன் விமானத்தின் பயிற்சியாளரும் உடன் இருந்துள்ளார். துகுகேராவ் விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
விமானத்தின் பாகங்கள்
இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் விமானம் விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது
விபத்துக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விமானத்தில் பயணம் செய்த அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவருமே பலியாகினர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 1 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்