ஈழத்தமிழர்களுக்கு பச்சைக்கொடி..! விடுதலைப்புலிகளுக்கு நேசக் கரம் - இந்தியாவின் இராஜதந்திரம்
"ஜனநாயக வழிக்கு திரும்பி இருக்கும் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும் விதமாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், சமஸ்டியே ஈழத் தமிழர்களுக்கு தீர்வு - அதற்காக 13 ஆவது சட்ட திருத்தத்தை செயற்படுத்த வேண்டும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும், தொல்லியல் துறையினர் ஆய்வு என்கின்ற பெயரில் எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும்"
இவை கடந்த ஒக்டோபர் 10 ஆம் திததி இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியால் முனைக்கப்பட்ட கோரிக்கைகள்.
இது மட்டுமன்றி இலங்கையில் சீன ஊடுருவலை தடுக்க தமிழீழம் அமைப்பது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்றும் குறித்த கூட்டத்தில் வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது.
ஆக, 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப் புலிகளை அடியோடு வெறுக்கத் தொடங்கிய இந்தியா இன்று விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் நீட்டி இருக்கிறது.
கிட்டத்தட்ட 35 வருடங்களாக விடுதலைப்புலிகளை தடைசெய்யப்பட்ட பட்டியலில் வைத்திருக்கும் இந்தியா, ஏன் இவ்வாறு இந்த நேசக்கரம் நீட்டியிருக்க வேண்டும்? இதற்குள் ஒளிந்திருக்கும், இராஜதந்திரம் என்ன? இவை பற்றிய பரந்த பார்வையோடு வருகிறது சாமானியனின் சாட்சியம்.
சாமானியனின் சாட்சியம்