இந்தோனேஷியாவில் பற்றி எரிந்த காட்டுத் தீ:நால்வர் உயிரிழப்பு
இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள தேசியப் பூங்காவொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று (15) டெங்கர் செமெரு தேசியப் பூங்காவிலேயே தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான காட்டுத் தீயாக இது பதிவாகியுள்ளது.
மேலும் இருவர் வைத்தியசாலையில்
மேலும் இருவர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்டுத்தீ இந்தோனேஷியாவின் எல்லைகளைத் தாண்டிப் பரவி, அண்டை நாடுகளைப் புகைமூட்டத்தால் மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்டு தீயினால் இந்தோனேஷியா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இவற்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் மலேசியா மற்றும் கிழக்கு திமோரில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன செய்தி வெளியாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |