விவசாய திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பயிர்கள் தொடர்பான தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் (Department of Agriculture) அறிவித்துள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் “1920“ என்ற விவசாய ஆலோசனை சேவையினால் செயற்படுத்தப்படும் விவசாய (SMS) குறுஞ்செய்தி சேவை மூலம் இந்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 10 வகையான பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசி எண்
இதற்கு 1920 எனும் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து அல்லது “KSMS“ இடைவெளி என உங்கள் பெயர் குறிப்பிட்டு பயிர் எண்ணைக் குறிப்பிட்டு 1920 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு விவசாயத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி நெல் பயிருக்கு எண் 01 உம், மிளகாய் பயிருக்கு எண் 02 உம் , சோளப் பயிருக்கு எண் 03 உம், பெரிய வெங்காயப் பயிருக்கு எண் 04 உம் , உருளைக்கிழங்கிற்கு எண் 05 உம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் புடலங்காய் பயிருக்கு எண் 06 உம், கத்தரிக்காய் பயிருக்கு எண் 07 உம், தக்காளி பயிருக்கு எண் 08 உம், பப்பாளி பயிருக்கு எண் 09 உம், வாழைப் பயிருக்கு எண் 10 உம் இட்டு பயிருக்கேற்ற ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்