ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!
People
Afghanistan
Taliban
SriLankans
By Chanakyan
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள நிலையில் அங்கிருந்த 66 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு பயண அனுமதி பெற்ற அனைவரும் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரையில் 66 இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதுடன் மேலும் ஏழு பேர் அழைத்துவரப்படவுள்ளனர்.
இதேவேளை 21 இலங்கையர்கள் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் தங்கி இருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இலங்கை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை கொண்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளது.