அதிபர் தேர்தல் குறித்து வெளியான தகவல்
சிறிலங்காவின் அதிபர் தேர்தல் 2024 செப்டம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர் எம் ஏ எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தலிற்கான உறுதியான திகதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்தல்
அரசியலமைப்பு மற்றும் அதிபர் தேர்தல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக பின்பற்றியே தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளிற்கான நிதியைப் பெறுதல் ஆவணங்களை தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2025 ஆம் ஆண்டிலேயே பொதுத்தேர்தல் எதிர்பார்க்கப்படுவதாகவும், புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல்களை துரிதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |