கொரோனா தொற்றிலிருந்து மீண்டோர் தொடர்பில் வெளியான தகவல்
Corona
People
SriLanka
By Chanakyan
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 415,649 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 488,482 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,431 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி