30வயதிற்கு மேற்பட்டோருக்கு இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்!
Corona
Vaccine
Shavendra Silva
Army
SriLanka
By Chanakyan
நாட்டிலுள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் இதுவரையில் 1,05,44, 229 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 30 வயதிற்கு மேற்பட்ட 11.4 மில்லியன் பேரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 10.54 மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.