தூண்டி விடப்படும் பௌத்த பிக்குகள்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் விதத்தில் சில நேரங்களில் பௌத்த பிக்குகள் சிலரை எதிர் கட்சியினர் தூண்டி விடுகின்றனர் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “ கௌரவ ஜனாதிபதி அவர்கள் தீர்மானம் ஒன்றை எடுத்தால், அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்தால், அமைச்சர்கள் அனைவரும் அந்த தீர்மானத்துடன் இணைந்திருக்க வேண்டும். அதனை விடுத்து, பறக்கும் பட்டங்ளை உருவாக்கி, அதன் ஊடாக சென்றால் மிகப் பெரிய அழிவு ஏற்படும். எதிர்க்கட்சிகள் பறக்கும் பட்டங்களை அனுப்புகின்றன. வெற்றி பெற்று ஜனாதிபதி அந்த பதவிக்கு கொண்டு வந்தது இந்த நாடு.
பிரதமரை நியமித்து அரசாங்கத்தை அமைத்து சரியான முடிவுகளை எடுக்கும் போது, அந்த தீர்மானங்களுடன் இருக்க வேண்டும். பௌத்த பிக்குகள் தலைமையேற்று ஜனாதிபதி மற்றும் எமக்கு ஆலோசனைகளை வழங்குதை தவறாக நான் காணவில்லை.
எனினும் சில நேரங்களில் பௌத்த பிக்குகள் சிலரை தூண்டி விடுகின்றனர். இந்த விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.