ரஞ்சன் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒருவார விடுமுறை என்ற அடிப்படையில் விடுதலை செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை சந்தித்துத் கலந்துரையாடியுள்ளார்.
அதன் பின்னர் ஊடகங்களக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நன்னடத்தை அடிப்படையில் உள்ள கைதிகள் சிலரை இனங்கண்டு ஒருவாரத்திற்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்திருக்கும் வகையில் விடுதலை செய்வது பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றோம்.
இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்.
இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.