இது ஜனாதிபதியின் நீண்ட கால நோக்கமில்லை - அமைச்சரவை இணை பேச்சாளர் வெளியிட்ட தகவல்
Gotabaya Rajapaksa
SLPP
SriLanka
Rames pathrana
By Chanakyan
அவசரகால சட்டத்தினை நீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதன் மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை முடக்கப்பட மாட்டாது.
உணவு பொருட்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.