பாடசாலைகள் எப்போது ஆரம்பமாகும்? இன்று வெளியான அறிவிப்பு
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எங்களுக்கு நான்கு கட்டங்களில் பாடசாலைகளைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அனைத்து ஆளுநர்களையும் அழைத்து அதன்படி செயற்படுமாறு அறிவுறுத்தினார்.
நாட்டில் உள்ள 10,155 பாடசாலைகளில் 3884 பாடசாலைகள் 1-5 வரை உள்ளன. இந்த பாடசாலைகள் அனைத்தையும் நாங்கள் தொடங்கலாம் என்று மாகாண ஆளுநர்கள் அமைச்சருக்கு நம்பிக்கை அளித்தனர்.
இத்தகைய பாடசாலைகளில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்கள் கல்வியைத் தொடரக்கூடிய சூழல் உள்ளதா? இன்று முதல் சம்பந்தப்பட்ட மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர்கள் ஏற்கனவே நிலைமையை கண்காணித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.