காவல்துறையினர் தொடர்பில் வெளியான பகீர் தகவல் -களமிறங்கியது உளவுத்துறை
police
heroin
legal action
By Sumithiran
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான காவலர்களை அடையாளம் காணும் வகையில் நாடு முழுவதும் புலனாய்வுத்துறை களமிறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஊழல் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்கள் பல்வேறு புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டமையே இதற்குக் காரணம்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் பணம் சம்பாதிக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களை அடையாளம் கண்டு காவல்துறை மா அதிபருக்கு புகார் அளிக்க உளவுத்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.