கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார அமைச்சின் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்
Corona
people
SriLanka
Hemantha Herath
By Chanakyan
எதிர்வரும் இரண்டு வாரங்கில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணங்கள் குறைவடைய வாய்ப்பிருப்பதாக சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 10 நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ள நிலையில், தொற்றுப் பரவல் குறைந்திருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் அவர் கருத்து எவையும் வெளியிடவில்லை.