காசா பகுதியிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்
பாலஸ்தீனத்தின் இலங்கைப் பிரதிநிதி அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே, பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் பாலஸ்தீனத்தில் தங்கியிருப்பதாக அதன் தலைவர் பென்னட் குரே குறிப்பிட்டுள்ளார்.
நிலவரம்
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
"காசா பகுதியில் 3 இலங்கை குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு குடும்பம் 22 ஆண்டுகளாக காசா பகுதியில் வசித்து வருவதோடு, மற்றொரு குடும்பம் சுமார் 5 ஆண்டுகளாக காசா பகுதியில் வசித்து வருகின்றனர்.
நாங்கள் தொடர்ந்து அந்த 3 குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தினமும் பேசி தகவல் பெறுகிறோம் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்படி அவர்களை இடம்பெயருமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் தற்போது தெற்கு திசையில் பாதுகாப்பான இடங்களில் உள்ளனர்.
காசா பகுதியில் இருந்து அவர்கள் வெளியேறுவது பற்றி செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தூதரக பிரிவு இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.