இனியபாரதி ஹிற் லிஸ்ற் பகிரங்கம்! பிள்ளையான் கக்கியதால் கைதுகள்
கொரோனா காலத்தில் எப்படி அந்தத்தொற்றுடன் மனிதர்கள் ஒரு நியூநோர்மல் எனப்படும் புதிய வழமை நிலையொன்றுக்குள் தள்ளப்பட்டார்களோ அது போலவே தமிழர் தாயக மக்களும் தமது உரித்துக்களுக்காக போராடுவதை புதிய வழமைக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் இன்னொரு புறத்தே மக்களுக்கு நீதிவழங்க வழங்குவதற்காக பழைய ஆட்சி ஆட்சிஅதிகார மையங்களின் நாசகார அல்லக்கை முகங்கள் சட்டரீதியாக தூக்கப்படும் நகர்வுகள் வருகின்றன.
அந்தவகையில் நேற்று கிழக்கில் தூக்கப்பட்ட இனிய பாரதி புனைபெயர் புஷ்பகுமாரும் அவரது முக்கிய சகபாடியான சசீதரன் தவசீலனும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல அவர்கள் மேற் கொண்ட நாசாரங்களின் ஹிற் லிஸ்ற் பட்டியலும் வெளிவந்துள்ளது.
கடந்த ஏப்ரலில் உள்ளே போடப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய பிள்ளையான்கக்கிய சில விடயங்களை ஆதாரங்களைக்கொண்டு கொழும்பில் இருந்து சென்ற சிறிலங்கா குற்றபுலனாய்வுத்துறை இந்த இருவரையும் விசாரணணைக்காகத் தூக்கியுள்ளது.
ஏப்ரல் முதல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானின் தடுப்புக்காவல் இந்த வாரம் 90 நாட்களை கடக்கும் நிலையில்இவர்கள் தூக்கபட்டுள்ள நிலையில் இனிய பாரதியும் பங்கெடுத்த ஹிற்லிஸ்ற் உட்பட்ட விடயங்களைத்தாங்கிவருகிறது செய்திவீச்சு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
