வடக்கில் இடம்பெறும் தமிழ்தினப் போட்டிகளில் முறைக்கேடு: மன உளைச்சலில் மாணவர்கள்
வடக்கில் தமிழ் தின போட்டிகளில் இடம்பெறும் முறைகேடுகள் காரணமாக மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமாகாண தமிழ் தின போட்டியில் முடிவுகளின் பிரகாரம் பல முறைகேடுகள் இடம்பெறுவதாக பாடசாலை மட்டத்தில் குற்றம் சாட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், மாணவர்களும் உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாகுவதாக பலதரப்பட்டவர்களும் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
போட்டிகளின் முடிவு
அண்மையில் வடமாகாண தமிழ்தின போட்டி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.
இதன்போது பல பிரிவுகளில் இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்று இருப்பதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் உள ரீதியாக பாதிப்படைவதாகவும் சட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் தின போட்டி
விவாத போட்டி, பாவோதல் போட்டி மற்றும் நடனம் உட்பட பல்வேறு போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்கள் அதற்கான நிலைகளை பெற முடியாத நிலையில் அவர்கள் தட்டிக்கழிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஒரு சில பாடசாலைகளுக்கு அங்கு நடுவர்களாக கலந்து கொள்பவர்கள் பக்க சார்பாக நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் தின போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்யப் போவதில்லை என பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
