நோயாளிக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியால் ஏற்பட்ட விபரீதம்!
ராகமை போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் ஆரம்பம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நோயாளி ஒருவர் கோ-அமோக்ஸிக்லெவ் என்ற தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊசி மருந்து
இந்நிலையில், தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த (28) மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்