ஞானசார தேரரிடமும் விசாரியுங்கள் - ஆளும் தரப்பு கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதலைப் போல இலங்கையில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த கலகொட அத்தே ஞானசார தேரரிடம் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் இதற்கு முன்னர் ஹலால் பிரச்சினையை உருவாக்கி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் சாரல் குழு தாக்குதல் தொடர்பில் அதற்கு முன்னரே ஞானசார தேரர் சில விடயங்களை தெரிவித்திருந்தார்.
எனவே தாக்குதல் தொடர்பான கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அவ்வாறு விசாரணை நடத்தாமல் இருந்தால் அரசாங்கத்தின் மீது அவர் குறை சொல்லும் நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.