காவல்துறை மா அதிபருக்கு எதிரான மனுக்கள் தொடர்பிலான விசாரணை ஒத்திவைப்பு
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின்(Deshabandu Tennakoon) நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் அலுவலத்தில் கடடையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி தேசபந்து தென்னகோனுக்கு எதிராக இந்த ஒன்பது மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, குறித்த மனுக்களை தேசபந்து தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் சவாலுக்குட்படுத்தி ஆட்சேபனைகளை எழுப்பியதுடன், இந்த மனுக்களை வரம்புக்குள் தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
வழக்கு ஒத்திவைப்பு
இதற்கமைய, மனுக்கள் மீதான விசாரணை பல நாட்கள் தொடர்ந்த நிலையில், அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்றம் மனுக்களை நேற்றிரவு(18) இரவு 8:50 மணிவரை விசாரணை செய்தது.
இந்நிலையிலேயே குறித்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் யசந்த கோதாகொட, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் மகிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |